ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டு! - குழாய் பதிக்கும் பணிகள்

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாக ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி கருத்து தெரிவித்துள்ளார்.

குழாய் பதிக்கும் பணிகள்
author img

By

Published : Aug 13, 2019, 5:20 AM IST

சென்னை குன்றத்தூர் சாலையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த மாதம் முதல் ராட்சத குழாய் புதைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் குன்றத்தூர் - போரூர் சாலை குண்டும் குழியுமாய் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அதனைச் சீர் செய்து சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை ஸ்ரீபெரும்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி ஆய்வு செய்து பணிகளைத் துரிதமாக முடிக்க அலுவலர்களிடம் தெரிவித்தார்.

குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்ட ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்

பின்னர் பேசிய அவர், “மூன்றாம் கட்டளையிலிருந்து, குன்றத்தூர் வரை சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் குன்றத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்பத்தூர் வரையிலான சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதற்கு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் குறித்து ஒரு சிலர் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அது தவறானது” என்றார்.

Intro:காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ கருத்து தெரிவித்தார்.
Body:
சென்னை குன்றத்தூர் சாலை சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த மாதம் முதல் ராட்சத குழாய் புதைக்கும் பணி நடைபெறுகின்றது, இதனால் குன்றத்தூர்-போரூர் சாலை குண்டும் குழியுமாய் இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது இதனை அடுத்து அதனை சீர் செய்து சாலை அமைக்கப்பட்டு வரும் பணியை ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி ஆய்வு செய்து பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளிடம் தெரிவித்தார். Conclusion:பின்னர் பேசிய அவர் மூன்றாம் கட்டளையில் இருந்து குன்றத்தூர் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான சாலை பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.மேலும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதற்கு மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் குறித்து ஒரு சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகின்றனர். அது தவறானது என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.