திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பழைய பனப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் தொட்டி உள்ளது.
ஆனால் இந்த குடிநீர் தொட்டியின் தூண்களில் தற்போது விரிசல் அடைந்து பலவீனமாக உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் குடிநீர் தொட்டியை சீரமைத்து தரவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.