திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் சட்டவிரோதமாக 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 கேன்களில் கடத்திவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. உடனே அதனை பறிமுதல் செய்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட சூசைநாதன் ,சங்கர், சத்யராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை, மாவட்ட மதுவிலக்கு காவல் துறையினர், ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் எளாவூர் ஏழு கண் பாலத்தின் கீழ் உள்ள உப்பங்கழி ஏரியில் இன்று கொட்டி தீவைத்து அழித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள எல்லையில் ரூ.50 லட்சம் சாராயம் பறிமுதல்!