திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குள்பட்ட மோவூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மழை நீரை வடித்து பயிர்களை பாதுகாப்பது குறித்து அறிவுரை வழங்கினார். வட கிழக்கு பருவ தொடர் மழை மற்றும் காற்றினால் சேதமடைந்த பப்பாளி வயல் நிலம் கத்திரிக்காய் தோட்டம், பூஞ்செடிகள் தோட்டம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் விவசாயிகள் தங்களது சாகுபடி செய்த பயிர் பரப்பினை கிராம நிர்வாக அலுவலரின் இ-அடங்கலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பூண்டி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : 'பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும்'