சென்னையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்தவர் இளங்கோ. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். சில திரைப்பட நடிகர், நடிகைகளுக்கும் வழக்கறிஞராகவும் உள்ள இளங்கோ மீது சிலர் ஆதாரமின்றி அவதூறு பரப்புவதாகக் கூறி, அவர் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களோடு அழைத்து வந்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகாரளித்தார்.
புகாரில் நெமிலச்சேரியைச் சேர்ந்த சோப்பியா, லூயிஸ் அந்தோனிராஜ் ஆகிய இருவரும் பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் மோசடி செய்துவிட்டு, அதனை திசை திருப்புவதற்காக வழக்கறிஞரான தன் மீது புகாரளிப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அவதூறும் பரப்பிவருகிறார்கள் எனக் இளங்கோ கூறியுள்ளார். மேலும் தன் வளர்ச்சி பிடிக்காத அணுகுண்டு ஆறுமுகம் என்பவரும் அவர்களுக்கு உதவி செய்வதோடு தன் உயிருக்கு அச்சுறுத்தல் தருவதாகவும் கூறியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'வழக்கறிஞர் போல் வேடமணிந்து பைக் திருடிய பலே கொள்ளையன்'