திருவள்ளூர்: திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர், சரண்யா. இவரது கணவர் முரளி. இவர் அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இவர் இந்தப் பகுதியில் அரசுப் பணிகளை செய்யவிடாமல் கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டும் தொனியில் பேசுவதாக கூறப்படுகிறது.
மேலும் மே மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லை என்றாலும் பரவாயில்லை அவர் தற்காலிகமாகப் பணி செய்பவார். ஆகையால், கிராம சபைக் கூட்டத்திற்கு அவர் அவசியம் இல்லை என்று அவரை ஒதுக்கி தீர்மானங்களில் கையெழுத்துபோட்டு உள்ளார். ஆகையால், தற்போது பொறுப்பு வகித்து வரும் கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன், மனமுடைந்து அருகில் உள்ள கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: ஜேடர்பாளையத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்..எஸ்.பி. விடுத்த வார்னிங்.. நாமக்கல்லில் நடப்பது என்ன?
அவர் அளித்தப் புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் காவல் நிலைய போலீசார் முரளியை இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அருங்குளம் கிராமப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஜெயிலில் சிக்கன் மசாலா குறைவு என கொலை மிரட்டல்; போலீஸ் பக்ருதீன் மீது வழக்குப் பதிவு!