திருவள்ளூர்: இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உரையாற்றினார்.
இதில், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பத்தூர், பூண்டி, திருவள்ளூர் ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கி்ணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை அமைக்கப்போவதாகவும், ஆன்மிக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்த ரஜினி ஆட்சி மாற்றம் செய்யப்போவதாக தெரிவித்திருப்பது நிச்சயம் முடியாது.
தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இந்த பேரியக்கத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது. ஆட்சி மாற்றம் என்பது நிச்சயம் நடக்காத ஒன்று” என்று ஆவேசமாக பேசினார்.