திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட மேப்பூர் ஊராட்சியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அவர் கொடியேற்றி வைக்க வந்தபோது, மேப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர், அதிமுகவைச் சேர்ந்த மோகன், வார்டு உறுப்பினர்கள் தங்களுக்குத் தெரிவிக்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என்றும் திமுக ஒன்றிய சேர்மன் தேசியக் கொடியை ஏற்றக்கூடாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பிரச்னை வலுக்காமல் இருக்க நசரத்பேட்டை உதவி ஆய்வாளரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 74ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!