திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள வீட்டில் நடிகையும் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது அண்ணன் அண்ணி குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினார். வீட்டின் முன்பு கோலமிட்டு தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்ட ரோஜா குடும்பத்தினருடன் வண்ண வண்ண பட்டாசு ரகங்களை உற்சாகத்துடன்வெடித்து கொண்டாடினார்.
அதன்பின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை ரோஜா, ஆந்திராவில் உள்ள மக்கள் நலனுக்காக பாடுபடும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுவதாகவும் நரகாசுரனுக்கு ஒப்பாக இருந்த முந்தைய ஆட்சியை ஜெகன்மோகன் ரெட்டி அழித்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் தீபாவளி பண்டிகையில் 354 வழக்குகள் பதிவு