திருவள்ளூர்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கடந்த 2014ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டு எவரும் தற்கொலைக்கு முயல்வதைத்தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு 'லிவ் லவ் லாஃப்' (Live Love Laugh) என்ற அமைப்பினை பெங்களூருவில் தொடங்கினார்.
இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச்சென்று, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலம் மற்றும் தற்கொலையிலிருந்து மீண்டு வரும் வகையிலான ஆலோசனைகளை தீபிகா படுகோனே வழங்கி வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன், திருவள்ளூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் உபகரணங்கள் வழங்கும் ஒப்பந்தம் 'லிவ் லவ் லாஃப்' அமைப்பால் கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக, வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பயனாளிகளைப் பார்வையிட்டு ஆலோசனை செய்வதற்காக தீபிகா படுகோனே நேற்று (அக் 8) மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் ஆரம்ப சுகாதார அலுவலர்கள், செவிலியர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தீபிகா படுகோனே ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து பயனாளிகளின் வீட்டிற்கு நேரடியாகச்சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கும் காப்பாளர்களிடம் உபகரணங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: 'திகட்டா தேனமுது' தீபிகா படுகோனே புகைப்படத்தொகுப்பு!