ETV Bharat / state

இலவச நோட்டுப் புத்தகங்கள் விநியோகித்த ’கூல் சுரேஷ்’ நண்பர்கள் நற்பணி சங்கம்! - Thruvallur news

நடிகர் கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணிசங்கம் சார்பில், மீஞ்சூர் பகுதியில் ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இலவச நோட்டு புத்தகங்கள் விநியோகித்த கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி சங்கம்

author img

By

Published : Nov 2, 2020, 7:29 AM IST

கோலிவுட்டில் பிரபல நடிகர் எஸ்.டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வில்லன், காமெடி ரோல்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

இவர், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அரியன் வாயில் பகுதியில் நேற்று (நவ.01) தனது நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், மீஞ்சூர் நகரத்தலைவர் பாஷா தலைமையில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், உபகரணங்களை வழங்கினார்.

இவ்விழாவில் கூல் சுரேஷ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கியதுடன், மாணவ மாணவிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முகக் கவசங்கள் வழங்கியும் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி சங்க நிர்வாகிகள், மாநிலத் தலைவர் ராஜ்குமார், மாநில துணைத்தலைவர் பாரத், மாநில துணைச் செயலாளர் பிரேம் ராஜ் மிஞ்சூர், மீஞ்சூர் நகரப் பொருளாளர் கிருஷ்ணலால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.