ETV Bharat / state

தரமற்ற நிலையில் சிக்கன் - 10 ஷவர்மா கடைகள் மீது அதிரடி நடவடிக்கை! - 10 ஷவர்மா கடைகள் மீது நடவடிக்கை

திருவள்ளூரில் தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த 10 ஷவர்மா கடைகள் மீது உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்
ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அதிகாரிகள்
author img

By

Published : May 6, 2022, 9:26 PM IST

திருவள்ளூர்: கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததைத்தொடர்ந்து தஞ்சையிலும் ஷவர்மா சாப்பிட்டு மூன்று மாணவர்கள் மயக்கமடைந்ததால் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஷவர்மா கடைகள், சிக்கன் கடைகளில் இறைச்சி தரமற்ற முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், மணவாளநகர் உள்ளிட்ட இடங்களில் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் கடந்த 3 நாள்களாக 60க்கும் மேற்பட்ட கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

ஷவர்மா கடையில் ஆய்வு செய்த அலுவலர்கள்

இதில் தரமற்ற நிலையில் ஷவர்மா கடைகள் சிக்கன் வைத்திருந்ததைக் கண்டறிந்து 10 கடைகள் மீது தலா 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று தரமற்ற நிலையில் செயல்படும் ஷவர்மா கடைகளை ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் சீல் வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை - உணவகத்தை மூடிய அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.