திருவள்ளூர் : முருகனின் ஐந்தாம் படைவீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்தும் வழிபடுவார்கள்.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. திருக்கோயில் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருக்கோயில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பரஞ்சோதி உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் சிலர் குடும்பத்தினருடன் மலைகோயிலுக்கு காவடி எடுத்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அரசின் விதிமுறைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி கடைபிடிக்க வேண்டிய அலுவலர்களே தடையை மீறி காவடி எடுத்துச் சென்றது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல் - மதுரை மலர் சந்தையை மூட ஆட்சியர் உத்தரவு