திருவள்ளூர்: கம்சலா என்னும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாக தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தங்கி விவசாய பணிகளை செய்து வந்துள்ளார்.
இவரது தம்பி ரவியின் பெண் குழந்தை 2 வயது இருக்கும் போது கம்சலாவின் தம்பி மனைவி லட்சுமி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடத்த 5 வருடத்திற்கு முன்பு தம்பி ரவியும் இறந்துவிட்டார். இதனால் அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் கம்சலா அழைத்து வந்து வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு (ஜூலை 24) ஆம் தேதி அந்த 8 வயது குழந்தை பாம்பு கடித்து இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அந்த 8 வயது குழந்தையை கடந்த 4 மாதத்திற்கு முன்பு பாலு என்பவர் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததையும், அதை அக்கிராமத்தை சேர்ந்த கண்ணன் (30) என்பவர் அவருடை செல்போனில் படம் பிடித்து வீடியோக்களை அவரது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேற்படி வீடியோ காட்சிகள் பற்றி விவரங்கள் கம்சலாவுக்கு ஜுலை25 ஆம் தேதி தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கம்சலா சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் 75 வயது முதியவர் பாலு, கண்ணன், மற்றும் அதே பகுதியைச்சேர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை என்பதால் இந்த வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்திரா தேவி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
மேலும் முதியவர் உள்ளிட்ட 6 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். விசாரணையில் 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரிடம் இளைஞர்கள் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தை 2 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்ததால் அது குறித்தும் விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
இதையும் படிங்க: பள்ளிக்குச்சென்று திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை!