திருவள்ளூர்: திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் பதிவு எண்ணை கொண்ட லாரி திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென நிலை தடுமாறி எதிர்த்திசையில் உள்ள பள்ளத்தை நோக்கி லாரி வேகமாக சென்றதாக தெரிகிறது.
அப்போது, திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இரண்டு கார்களில் சென்றுகொண்டிருந்தனர். மீது லாரி மோதி சாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் இரண்டு கார்களில் சிக்கியிருந்த நபர்களை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து அறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற கனகம்மாசத்திரம் போலீசார் போக்குவரத்து பிரச்சனையை சீர்செய்துவிட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இரண்டு கார்களை ஒட்டி வந்தவர்கள் சதீஷ் குமார் மற்றும் யுவராஜ் என்பதும் இதில் சதீஷ் குமார் திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொரு ஒட்டுநரான யுவராஜ் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில், ஒரு காரில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் பயணம் செய்துள்ளனர். மற்றொரு காரில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் இருந்துள்ளனர்.
இதில், நிகிதா (15), சம்சித்தா (8) குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!