திருத்தணி முருகன் கோவிலில் கடந்த சில வாரங்களாக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 13 நாட்களுக்கான உண்டியல் காணிக்கையை இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பழனி குமார் ஆகியோர் முன்னிலையில் கணக்கிடப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வந்த இந்த உண்டியல் காணிக்கை இன்று நிறைவடைந்தது. அதில், 71 லட்சத்து 82 ஆயிரத்து 756 ரூபாய் ரொக்கம், 528 கிராம் தங்க நகைகள், 3 ஆயிரத்து 643 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவை இருந்தன.
இதையும் படிங்க:
திருத்தணி கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஆலோசனை கூட்டம்