திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 70 படுக்கைகள் கொண்ட அறையை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் இன்று (ஜூன் 9) திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக 2 ஆயிரம் நபர்களுக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரு நாளில் 400 நபர்களுக்கு மட்டுமே தொற்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்று (ஜூன் 09) 372 நபர்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதித்த நோயாளிகளுக்கு ஆயிரத்து 254 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதில் 714 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை. அதில் தற்போது 412 படுக்கை காலியாக உள்ளன.
இந்நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஐன் வசதியுடன் கூடிய 70 படுக்கைகள் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக 272 படுக்கைகள் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.