ETV Bharat / state

6 Peoples Rescued from Flood: திருவள்ளூர் வெள்ள நீரில் சிக்கிய 6 பேர் மீட்பு

குப்பத்துபாளையத்தில் கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீயணைப்புத் துறையினரால் (6 peoples rescued from flood) பத்திரமாக மீட்கப்பட்டனர்.

6 peoples rescued from flood
6 peoples rescued from flood
author img

By

Published : Nov 20, 2021, 6:31 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் அதீத கனமழையின் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குண்ணவளம் ஊராட்சிக்குள்பட்ட குப்பத்துபாளையத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வேளாண் நிலத்தில் வீடு கட்டி வசித்துவந்தனர்.

இவர்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்று அதிகாலை முதலே உணவின்றித் தவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலானோர் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் வெள்ளத்தில் சிக்கிய சௌந்தரி, மணிகண்டன், கோவிந்தன், சுப்பிரமணி, செஞ்சு, அலமு ஆகியோரை (6 peoples rescued from flood) பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் வருவாய்த் துறையினரால் பத்திரமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Watch Video: தேவாலயத்திற்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.