திருவள்ளூர் மாவட்டம் நேமம் அருகே உள்ள கொதியம்பாக்கம் கிராமத்தில் 'எஸ்கேஎம் ஹாலோ பிளாக்' என்ற தனியார் ஆலையில் ஒடிசாவைச் சேர்ந்த ஹமீது கர்சாய் பணிபுரிகிறார். இவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த சிறுமி காணாமல் போனார். சிறுமியை பெற்றோர்கள் தேடும் போது மர்மமான முறையில் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்டு சிறுமி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு பணிபுரியும் நிராகர் மற்றும் சந்திரபானு என்ற இருவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.