ETV Bharat / state

300 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

திருவள்ளூர்: சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூபாய் 300 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது.

author img

By

Published : Apr 18, 2019, 7:31 AM IST

பறக்கும் படை சோதனையில் 300 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி தங்கக் கட்டிகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனடிப்படையில், இரண்டு வாகனங்களையும் பூந்தமல்லி வளர்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்ற பறக்கும் படையினர் தீவர விசாரணை மேற்கொண்டனர்.

பறக்கும் படை சோதனையில் 300 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது

இதில், பறிமுதல் செய்யப்பட்ட 361 கிலோ எடை கொண்ட தங்கம் (சுமார் 300 கோடி ரூபாய்) சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவ்வாகனங்களில் வந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் கொண்டுவந்த ஆவணங்களைச் சரிபார்த்து பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர் சுரேஷ்பாபு

திருவள்ளுர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவனங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான 1381  கிலோ தங்க கட்டிகள் பறிமுதல். தமிழகத்தில் மக்களவை தேர்தல்  நாளை நடைபெறவுள்ள நிலையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற  தேர்தலுடன் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் தமிழகதேர்தல் ஆணையத்திற்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டிருந்தார். அதனை அடுத்து வில்லிவாக்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் திருவள்ளுர் அருகே புதுச்சத்திரம் பகுதியில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் தங்க கட்டிகளை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் உடனடியாக தங்க கட்டிகள் கொண்டு வந்த இரண்டு வாகனத்தையும் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாகனத்தில் மொத்தம் பெட்டி, பெட்டியா 1381 கிலோ தங்கம் இருப்பதும் இந்த தங்கம்  ஸ்சுவிச்சர்லாந்து நாட்டில் இருந்து சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கொண்டு வரப்பட்டும் பின்னர் சென்னை பஞ்சாப் வங்கி மூலமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொண்டு செல்வதாக பிடிப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள்   கொண்டுவந்த ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வாகனங்களை ஒப்படைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.