திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே இருளஞ்சேரி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மப்பேடு காவல்துறையினர் கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இருளஞ்சேரி அருகே சோதனை மேற்கொண்டபோது அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்றுபேரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் முற்பட்டனர்.
அப்போது அங்கிருந்த கமலக்கண்ணன் என்ற நபர் தப்பி ஓடியதால் மீதமிருந்த மகாலிங்கம், பிரேம்குமார் ஆகிய இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் கையில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய கமலக் கண்ணனை தேடி வருகின்றனர்.
மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 1250 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்