தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் திருமழிசையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் அரண்வாயல் மற்றும் முருகஞ்சேரி பகுதிகளில் 17 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மின்கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மின் கம்பங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.