திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது காரனோடையில் இருந்து மினி வேனில் ஆரணி பெரியபாளையம் பகுதியில்காரனோடை குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்துகொண்டு சென்ற 13 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை திருத்தணி வட்டாட்சியர்மணிகண்டன்தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர்பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வண்ணாரபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஆதிகேசவன்என்பவரை பிடித்து கவரைப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் வசம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
காவலர்களின் சாதனையை மீறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.