ETV Bharat / state

போரூர் ஏரியில் நடப்பட்ட 1200 மரக்கன்றுகள் - களம்கண்ட இளைஞர்கள்! - பனைமரங்கள் நடப்பட்டது

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியினைச் சுத்தம் செய்த தன்னார்வ அமைப்புகள் ஏரியின் கரையோரம் 1,200 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்

1200 tree plantation in porur lake
author img

By

Published : Oct 2, 2019, 11:07 PM IST

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளைத் தூர்வாரி சீரமைக்க குடிமராமத்துப் பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். மேலும் நீர்நிலைகளை சீரமைக்க தன்னார்வலர்களும் பொதுமக்களும் முன்வரலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பல்வேறு தன்னார்வலர்கள் அவர்கள் வசிக்கின்ற பகுதிகளில் இருக்கிற நீர்நிலைகளை சீரமைத்து வந்தனர். இதன் ஓர் அங்கமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியைச் சீரமைக்க தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.

ஏரிக்கரையோரம் மரக்கன்றுகளை நட்ட தன்னார்வ அமைப்புகள்

அதன் படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் மூன்று கட்டமாக ஏரியைச் சீரமைக்க முடிவு செய்து ஏரியில் உள்ள குப்பைகள், கருவேல மரங்களை அகற்றினர்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போரூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இது குறித்து தன்னார்வலர்கள் பேசுகையில், கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதுவரை 20 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 1200 மரக்கன்றுகள் ஏரியின் கரையோரம் நடப்பட்டுள்ளது. விரைவில் ஏரியை தூர்வாரும் பணிகளைத் தொடங்க உள்ளோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை தேவை' - பாமக நிறுவனர் ராமதாசு!

Intro:போரூர் ஏரியில் தனியார் அமைப்பு மூலம் 1200 பனை மரக்கன்றுகள் நடப்பட்டது.
Body:தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்க குடி மராமத்து பணிகளை முதல்வர் தொடங்கிவைத்தார் மேலும் நீர்நிலை பிடிப்பு பகுதிகளை சீரமைக்க தன்னார்வலர்களும், பொதுமக்களும் முன்வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி புதர் மண்டியும் குப்பைகள் நிறைந்தும் காணப்பட்டது இதையடுத்து தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி மூன்று கட்டமாக போரூர் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் முதல் கட்டமாக போரூர் ஏரியில் உள்ள குப்பைகளை அகற்றுவது, கருவேல மரங்களை அகற்றுவது, மூன்றாம் கட்டமாக மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு போரூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. Conclusion:இதுகுறித்து அந்த பனியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் : போரூர் ஏரியில் ஜூலை மாதம் 20ம் தேதி முதல் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை 20 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது மூன்று கட்டமாக நடந்த இந்த பணியில் கருவேல மரங்கள் நீக்கப்பட்டது 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட போரூர் ஏரியில்
மூன்றாம் கட்டமாக 1200 மரக்கன்றுகள் கரையோரம் நடப்பட்டது. பனை விதைகள் நடுகிறோம் விரைவில் ஏரியை தூர் வாரும் பணிகள் தொடங்க உள்ளோம் என தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.