திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொண்டகரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், அவரது மனைவி சர்மிளா இருவரும் அருகில் உள்ள குருவி மேடு என்ற பகுதிக்கு விழாவிற்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
பின்னர் லாரியிலிருந்து இறங்கிய 8க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் சரமாரியாக வெட்டினர். அப்போது அவரது மனைவியும் அவரும் கெஞ்சியும் விடாமல், தடுக்க முயன்ற மேலும் ஒருவரையும் வெட்டினர். இதனால் படுகாயமடைந்த மனோகரனை ஆகாஷ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அவரது உடலை மீஞ்சூர் காவல்துறையினர் அனுப்பி வைத்து, கொலை சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அங்கு பதிவாகி உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு லாரியுடன் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலையா...? இல்லை வேறு எதும் காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த மாதம் 6ஆம் தேதி தனியார் டோரெண்ட் வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலையில் ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் சமரசம் மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
தற்பொழுது நிபந்தனை ஜாமினில் வெளியிலிருந்த நிலையில் அந்தப் பிரச்சினையில் அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.. பொதுமக்கள் சாலை மறியல்.. போலீசார் குவிப்பு!