திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் கும்மிடிப்பூண்டி சரக காவல் துறையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 கிலோ கஞ்சா
தொடர்ந்து நேற்று (ஜூலை 24) காலை பாதிரிவேடு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து வழித்தட எண் 103-N அரசுப்பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக, பயணித்த இருவரிடமிருந்த இரண்டு பைகளில் ஐந்து பொட்டலமாக வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
பின்னர் விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம், கூடூரைச்சேர்ந்த சாய் (21), நெல்லூரைச்சேர்ந்த கணேசன் (25) என்பது தெரியவந்தது.
கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக சென்னை கொண்டு செல்வது தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த பதிரிவேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: 'தேனியில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடி சோதனை'