ETV Bharat / state

சாலையில் இருசக்கர வாகன சாகசம்... அச்சத்தில் வானக ஓட்டிகள்... - பாளையங்கோட்டை வஉசி மைதானம்

பாளையங்கோட்டை வஉசி மைதானம் பகுதியில் இளம் பெண்களை கவருவதற்காக இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்து வருகின்றனர்.

Etv Bharat சாலையில் சாகசம் செய்யும் இளைஞர்கள்

author img

By

Published : Aug 22, 2022, 11:28 AM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வஉசி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரங்களில் ஏராளமான துரித உணவக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், வேலைக்குச் சென்று வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலைக்குச் சென்று வரும் இளம் பெண்கள் பலர் இந்த கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் இளைஞர்கள் சிலர் தினமும் சாலையில் பைக் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலையில் சாகசம் செய்யும் இளைஞர்கள்

அதேபோல், நேற்று இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன்பக்க சக்கரத்தை மட்டும் தூக்கி ஸ்டண்ட் செய்துள்ளார். இதனால், சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் இந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், இது குறித்து காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.