ETV Bharat / state

முறைப்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த இளைஞர் - சுத்தியால் அடித்து கொலை

நெல்லையில் தன் முறைப்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முறைப்பெண்ணை சுத்தியலால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது

author img

By

Published : Mar 31, 2022, 4:50 PM IST

Updated : Mar 31, 2022, 5:20 PM IST

நெல்லை: அம்பை அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியைச்சேர்ந்த பேச்சி என்பவருடைய மகன் பசுபதி என்ற பாண்டி (35). இவர் குளத்து வேலை செய்துவருகிறார். இவருடைய முறைப்பெண் பிரியா(25). இவர் தற்போது இதே வீட்டிலேயே (தன் பாட்டி வீடு) வசித்து வந்திருக்கிறார்.

சுத்தியலால் அடித்துக்கொலை: பிரியாவின் அப்பா, அம்மா ஏற்கெனவே இறந்து விட்டபடியால் அவருடைய தகப்பனாருடைய இரண்டாவது மனைவி சித்தியின் அரவணைப்பில் மேலப்பாளையத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக, சித்தி சொந்த வேலை காரணமாக மும்பை சென்றபடியால், பிரியாவை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். ஏற்கெனவே பாண்டிக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு செய்த நிலையில், பிரியாவின் பாட்டி வெளியே சென்றுள்ளார்.

அப்பொழுது பசுபதியும், பிரியாவும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில், பிரியாவை பசுபதி என்ற பாண்டி(வயது 35) சுத்தியலால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பசுபதியைப் பிடித்து, கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.

இதில் பாண்டிக்கு அவ்வப்பொழுது மனநலம் பாதிக்கப்படும் என்றும்; அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பசுபதியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் துறையினர் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை

Last Updated : Mar 31, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.