ETV Bharat / state

திருநெல்வேலியில் பெண் கொலை: திருமணத்தை மீறிய உறவு காரணமா? - tirunelveli district news

திருநெல்வேலி: திருமணத்தை மீறிய உறவு காரணமாக பெண் வெட்டி கொலை செய்யப்பட்டாரா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் வெட்டி கொலை
பெண் வெட்டி கொலை
author img

By

Published : Nov 17, 2020, 3:18 PM IST

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி செங்குளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் முத்துப்பண்டி (40). இவரது மனைவி முப்பிடாதி (35). இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். முத்துப்பாண்டி தூத்துக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று (நவ.16) முப்பிடாதி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முப்பிடாதி கழுத்தில் வெட்டியுள்ளனர்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தூத்துக்குடியிலிருந்து முத்துப்பாண்டி நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து பாப்பாகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் முப்பிடாதி அதே பகுதியைச் சேர்ந்த நபர்களுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.

மேலும் துர்க்கை முத்து (20) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலியுடன் மணமகன் ஓட்டம்: 'மகள் காணவில்லை' எனத் தாயார் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.