ETV Bharat / state

நெல்லையில் ஒரே நாளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் - வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

வேட்பு மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (மார்ச் 14) பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுத் தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று முன் தினம் (மார்ச் 14) நெல்லையில் ஒரே நாளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.

author img

By

Published : Mar 16, 2021, 8:12 AM IST

நெல்லை: வேட்பு மனு தாக்கலின் முதல் நாளில் நெல்லை மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும் சேர்த்து, பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட மொத்தம் மூன்று பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (மார்ச் 14) பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி பாளையங்கோட்டையில் அதிமுக வேட்பாளர் ஜெரால்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணனிடமும், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா, தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைசாமியிடமும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆவுடையப்பன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதிக் தயாளிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நெல்லையில் ஒரே நாளில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை தொகுதி வேட்பாளர் சத்யா, அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் செண்பக வள்ளி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கிடையில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெரால்டு, “நான் வெற்றி பெற்றால் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன்” என செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார்.

இதையும் படிங்க : ’சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' - திமுகவை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.