திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ராசப்பா (29). இவர், இன்று (ஆகஸ்ட் 29) அதிகாலை மேலப்பாளையம் பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று துரத்தியது.
இதையடுத்து, பீதியில் ஓட்டம் பிடித்த ராசப்பாவை அந்தக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கை, கால்களில் வெட்டுப்பட்ட ராசப்பாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முன்விரோதம் காரணமாக ராசப்பாவை யாரும் வெட்டினார்களா என்பது குறித்தும் வெட்டியது யார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு