ETV Bharat / state

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது! - bocso act

நெல்லையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது

author img

By

Published : May 2, 2022, 10:44 PM IST

நெல்லை: 15 வயது சிறுமி ஒருவர் தனது தாய் தந்தை இல்லாததால் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். பாட்டியின் அரவணைப்பில் அங்குள்ள தனியார் பள்ளியில் அச்சிறுமி பத்தாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் பொன் கணேஷ் (20) என்ற இளைஞருடன் சிறுமிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை கட்டாயப்படுத்தி பொன் கணேஷ் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தன்னுடன் நெருங்கிப் பழகும் விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுபோன்ற சூழலில் சிறுமியின் பள்ளியில் பாட்டு வாத்தியாராக பணிபுரிந்து வரும் அருள்ராஜ் ஜோசப்(24) சிறுமியைத் தொடர்பு கொண்டு, அவருக்கு பைக் ஓட்ட கற்று தருவதாகக் கூறியுள்ளார். ஆசிரியர் என்பதால் அவரை நம்பி சிறுமி அருள்ராஜ் ஜோசப் உடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றபோது, மலைப்பகுதி அருகே வைத்து ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை பொன் கணேஷிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொன் கணேஷ் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு சிறுமி விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்கப் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொன் கணேஷ், சிறுமியின் இல்லத்துக்கு அடிக்கடி வருவதை கவனித்த சிறுமியின் பாட்டி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது பொன் கணேஷ் மற்றும் ஆசிரியர் அருள்ராஜ் ஜோசப் இருவரும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவம் அண்மையில் அதிகரித்து வரும் சூழலில் நெல்லையில் ஆசிரியர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நாங்கள் ஆதிதிராவிடர் இல்லை; தேவேந்திரகுல வேளாளர்' - பெயர் மாற்றம் தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.