ETV Bharat / state

’சொன்னது போலவே உதவிய மாவட்ட நிர்வாகம்’ - நன்றி நவிழும் பழங்குடியினர்! - பழங்குடியின குடும்பங்களுக்கு உதவி

திருநெல்வேலி: பழங்குடியின மக்களுக்கு இரண்டாம் முறையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

நன்றி நவிழும் பழங்குடியின குடும்பங்கள்
நன்றி நவிழும் பழங்குடியின குடும்பங்கள்
author img

By

Published : Apr 18, 2020, 3:24 PM IST

கரோனா பெருந்தொற்றின் தீவிர பரவுதலால், ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இதனால், விளிம்புநிலை மக்கள் உணவு பற்றாக்குறையால் தவிக்கின்றனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் உதவிவருகின்றனர்.

’சொன்னது போலவே உதவிய மாவட்ட நிர்வாகம்’ - நன்றி நவிழும் பழங்குடியினர்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஊரடங்கினால் முடங்கிய தொழிலினால், உணவின்றி பசியால் வாடினர். இதையடுத்து, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 21 நாள்கள் ஊரடங்கு நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.

அந்தச் சமயத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அத்தியாவசிய பொருள்கள் மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது.

தற்போது, அனைத்து உணவுப் பொருள்களும் தீர்ந்துபோனதாகவும், வரக்கூடிய ஊரடங்கு நாள்களைச் சமாளிக்க உதவுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பழங்குடியினர் கோரிக்கைவைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், இரண்டாம் கட்டமாக 263 பழங்குடியின குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினார்.

இது குறித்து, பழங்குடியினர் தெரிவிக்கும்போது, மாவட்ட நிர்வாகம் எங்களிடம் சொன்னது போலவே உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றி என்றனர்.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியவில்லையெனில் அபராதம்: நெல்லை மாவட்ட நிர்வாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.