ETV Bharat / state

நாடாளுமன்றத்தேர்தலில் 40க்கு 40 பெறுவது தான் நம் லட்சியம் - திமுக கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் (parliamentary election) 40க்கு 40 தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சிய நோக்கோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசினார்.

parliamentary election
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 பெறுவது தான் நம் லட்சியம்
author img

By

Published : Aug 6, 2023, 11:33 AM IST

நாடாளுமன்றத்தேர்தலில் 40க்கு 40 பெறுவது தான் நம் லட்சியம் - திமுக கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கூட்டரங்கில், மாவட்ட அவைத் தலைவர்கள் கிரகாம்பெல், முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நிதி மற்றும் மனித வள மேம்பாடு - மின்சாரத்துறை அமைச்சரும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ''உயிர் துடிப்புடனும், உயிரோட்டமாகவும் கழகம் இயங்கும் ஒரு மாவட்டம் நெல்லை மாவட்டம். ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து மாற்றப்பட்டு தற்போது மீண்டும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். எப்போதும் நெல்லை மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஆதலால் தான், கீழடி போன்றே பொருநை நாகரிகத்தை உலகறியச் செய்யும் வகையில், உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை இங்கு அமைக்கிறோம்.

இந்த பணி முடிந்து முதலமைச்சர் கையால் திறக்க வைக்க வேண்டும் என்பதற்காக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, முதலமைச்சரிடம் தொல்லியல் துறை என்னிடமே இருக்கட்டும் என கேட்டுப்பெற்றுள்ளேன். பாண்டிச்சேரி சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்தமுறை 40-க்கு 40 என்பதில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம். தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதியையும் பெறவேண்டும் என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக, நெல்லை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்ற பெருமையை பெற்றுத்தர வேண்டும்.

மேலும், ராமநாதபுரத்தில் வரும் 17ம் தேதி நடக்கும் பாகமுகவர்கள் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 1484 முகவர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், அதுபோன்று அடுத்தநாள் 18ம் தேதி நடக்கும் மீனவர்கள் மாநாட்டிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் உன்னத தலைவர், அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பன்முகத்தன்மையோடு விளங்கக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். இந்த விழாவின் மூலம் திமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் முதலமைச்சரின் கடின உழைப்பிற்கு பாராட்டு தெரிவிப்பது, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அமைச்சர் தங்கம் தென்னரசு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வற்றாத ஜீவநதியாக மாறிய நாக நதி.. 3-வது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.