கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் போன்றவைகள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாளையங்கோட்டை மகராஜ நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட் தடை உத்தரவின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் பொருள்கள் வாங்கிச் செல்வதாகவும் மாநகராட்சி அலுவலர்ளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டதில் சூப்பர் மார்க்கெட் செயல்படுவது தெரியவந்து. பின்னர் சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை எச்சரித்த மாநகராட்சி அலுவலர்கள் அந்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர்.
மாநகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக விதிமுறைகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலருக்கு கரோனா தொற்று - குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது