ETV Bharat / state

சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணை: தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை! - தற்கொலை இறப்பு

திருநெல்வேலி: வல்லவன்கோட்டையில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றதை அவமானமாகக் கருதிய தாய், மகள் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli Mother Daughter Suicide Tirunelveli Suicide Death Vallavan Kottai Suicide Death திருநெல்வேலி தாய் மகள் தற்கொலை தற்கொலை இறப்பு வல்லவன் கோட்டை தற்கொலை இறப்பு
Vallavan Kottai Suicide Death
author img

By

Published : Mar 17, 2020, 5:46 PM IST

திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலைமுருகன். இவரது மனைவி வள்ளியம்மாள். இவருக்கு மகராசி (8), கனகலட்சுமி (5) என்ற மகள்கள் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, திருமலை முருகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அபிஷேகப்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

இதனால் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வள்ளியம்மாள் தோட்ட வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி ஆவுடைதங்கம் என்பவருடன் வள்ளியம்மாள் நண்பர்களாக இருந்து வருவதோடு அனைத்து இடங்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆவடைதங்கத்தின் வீட்டிலிருந்த ஆறரை சவரன் தங்கநகைகள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் அவுடைதங்கத்தின் கணவர் சுரேஷ் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்தபோது, வள்ளியம்மாள் அடிக்கடி வீட்டிற்கு வந்துச் செல்வது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் வள்ளியம்மாளைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் சென்று மாலையில் விசாரணைக்கு பின் விடுவித்ததாகத் தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த வள்ளியம்மாள் வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்ததுள்ளார்.

தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை.

பின்னர் இரவு 2 மணியளவில் தனது மகள் மகாராசிக்கும், கனகலட்சுமிக்கும் தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். அப்போது, இரண்டாவது மகள் கனகலட்சுமி அதனை குடிக்காமல் தட்டி விட்டு வெளியேச் சென்றுள்ளார்.

பின்னர் சிறுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்த போது மகராசி விஷம் குடித்த நிலையில் உயிரிழந்தும், வள்ளியம்மாள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைக் கண்டு, அவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் உயிரிழந்தார்.

வள்ளியம்மாளின் கணவர் விபத்தில் உயிரிழந்தற்கு காப்பீட்டுத் தொகை சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடந்த வாரம் வந்துள்ளதாகவும், இந்நிலையில் ஆவுடைதங்கத்தின் நகை திருட்டு போனதால் அவரது கணவர் சுரேஷ் வள்ளியம்மாள் வீட்டில் வந்து நகையைத் திருடியது நீ தான் எனது பணத்தை உடனடியாக கொடுத்து விடு என மிரட்டி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் வள்ளியம்மாள் அவமானம் தாங்காமல் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாயும், மகளும் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குழந்தை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.