ETV Bharat / state

நெல்லையில் நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு - நெல்லை மாநகராட்சி

திருநெல்வேலி: மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் திடீரென ஆய்வு செய்தார்.

Municipal Commissioner inspection
Tirunelveli Smart City works
author img

By

Published : Oct 31, 2020, 8:14 PM IST

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இந்தப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் இன்று (அக். 31) ஆய்வு செய்தார்.

நெல்லை புதிய பேருந்து நிலைய அடுக்குமாடி வளாகம் கட்டும் பணி, பொதிகை நகர், திருமால்நகரில் நடக்கும் பூங்கா பணி, மேலப்பாளையம் ஆடு அறுப்பு மையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய பணி, நேருஜி கலையரங்க கட்டுமான பணி, நெல்லை சந்திப்பில் கட்டப்பட்டுவரும் நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் கட்டப்பட்டுவரும் வர்த்தக மையம், பாதாளசாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை நகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

இதற்கிடையில், நெல்லை சந்திப்பில் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டுவருகிறது. இந்தப் பகுதியில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக அடிப்படை பணிகள் தொடங்கிய நிலையில் அங்கிருந்து பல கோடி ரூபாய் மதிப்பில் ஆற்று மணல் எடுக்கப்பட்டு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்கு உள்ள நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரஜினி படங்களை பார்த்து நேர்மையை கற்றுக் கொண்ட ரஜினி முருகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.