ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம்!

author img

By

Published : Dec 27, 2020, 11:11 AM IST

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் திருவாதிரை திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம் நேற்று (டிச. 26) நடைபெற்றது.

நெல்லையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த மனோன்மணி அம்பிகையின் திருக்கல்யாணம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மனோன்மணி அம்பிகை திருக்கல்யாண விழா நேற்று (டிச. 26) சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள மஹா மண்டபத்தில் நடைபெற்றது.

நெல்லையப்பர் திருக்கோயில் அமைந்துள்ள இரட்டை மூலவர்களில் ஒருவரான வேணுவனேஸ்வரர் கருவரையில் ஆண்டுதோறும் மக்களால் காணமுடியாத ஒரு மூலையில் இருக்கும் மனோன்மணி அம்பிகை நெல்லையப்பர் திருக்கோயில் திருவாதிரைத் திருவிழாவின் ஆறாம் நாள் அன்று மூலஸ்தானத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண நிகழ்வுக்காக மனோன்மணி அம்பிகை மூலஸ்தானத்திலிருந்து மஹா மண்டபத்தில் நேற்று (டிச. 26) மாலையில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு திருமாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் இசைக்க மனோன்மணி அம்பிகைக்கு மூலஸ்தானத்தில் சுவாமி முன்னாள் வைத்து எடுத்துவரப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நேற்று (டிச. 26) இரவு நடைபெற்றது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தரும் மனோன்மணி அம்பிகையை திருக்கல்யாண நிகழ்வின்போது, கரோனா கட்டுப்பாடுகளை கடைப்படித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க...நெருங்கும் தேர்தல் மீண்டும் ஆட்சியமைக்குமா அதிமுக ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.