ETV Bharat / state

கணவன் - மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - Tirunelveli District Court has sentenced man to double life imprisonment for killing husband and wife

நெல்லை அருகே கணவன் - மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

tirunelveli-district-court-has-sentenced-man-to-double-life-imprisonment-for-killing-husband-and-wife கணவன் மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை -  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
tirunelveli-district-court-has-sentenced-man-to-double-life-imprisonment-for-killing-husband-and-wifeகணவன் மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
author img

By

Published : Apr 19, 2022, 5:50 PM IST

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தைச் சேர்ந்தவர், செல்லையா. இவரது மனைவி பேச்சுத்தாய். இவர்களைக் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஏதோ ஒரு பிரச்னை தொடர்பாக ஆறுமுக ராஜ் என்பவர் செல்லையா, பேச்சுத்தாய் ஆகிய இருவரையும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

இதனையடுத்து, இதனைத் தட்டிக் கேட்கச் சென்ற செல்லையா மற்றும் அவரது மனைவி பேச்சு தாயை ஆறுமுகராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்குத்தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக ராஜ் என்பவரைக் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இதனிடையே, இந்த வழக்கு திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைசெய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், நேற்று (ஏப்ரல்.18) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபா குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுக ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து; பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.