ETV Bharat / state

நெல்லையில் தொடரும் கழிவுநீர் கால்வாய் பிரச்னை: அரசு செலவிட்ட கோடிகள் என்னாச்சு? - tirunelveli news in tamil

2007ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கோடிக்கணக்கில் செலவிட்டும் நெல்லை மாநகராட்சியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. கோடிக்கணக்கில் செலவிட்டும் மந்தமாக நடைபெறும் பாதாளச்சாக்கடை பராமரிப்புப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் குறித்து விளக்குகிறது இச்செய்தித்தொகுப்பு..

Tirunelveli Corporation Sewage canal problem
திருநெல்வேலி மாநகராட்சியில் தொடரும் கழிவுநீர் கால்வாய் பிரச்னை; அரசு செலவிட்ட கோடிகள் என்னாச்சு
author img

By

Published : Nov 11, 2020, 6:59 PM IST

நெல்லை:தமிழ்நாட்டில் பழமையான மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சியும் ஒன்று. குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகளை நிறைவு செய்வதில் நெல்லை மாநகராட்சி தொடர்ந்து மெத்தனம் காட்டிவருகிறது. மாநகரின் சுகாதாரத்தைப் பேணுவதில் கழிவுநீர் சுத்திகரிப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது.

பாதாளச் சாக்கடை பாரமரிப்புப் பணிகளுக்கு நெல்லை மாநகராட்சி செலவிட்ட தொகை எவ்வளவு?

நெல்லை மாநகராட்சியில் 2007ஆம் ஆண்டு ரூ.52 கோடி மதிப்பில் குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவியுடன் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, 12 வார்டுகளுக்கு முழுமையாகவும் 9 வார்டுகளுக்கு பாதியாகவும் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டது.

அதன்பிறகு 11ஆம் ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டு இரண்டாம் கட்டமாக மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.289 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல், மூன்றாம் கட்டமாக 440.19 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்க அதே 2018ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட திட்டத்தில் 18 வார்டுகளுக்கு முழுமையாகவும் 13 வார்டுகளில் பகுதியாகவும் பாதாள சாக்கடை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி நெல்லை மாநகராட்சியில் 23,949 பாதாளச்சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 12.5 கி.மீ ஊந்து குழாய்களும் 40 கி.மீ தூரத்திற்கு கழிவுநீர் குழாய்களும், 7942 ஆழ் இறங்கும் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழாய்களில் சேகரித்துவரப்படும் கழிவுநீர் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் சராசரியாக 24 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் தொடரும் கழிவுநீர் கால்வாய் பிரச்னை

குடிநீருடன் கால்வாய் நீர் கலக்கும் அவலம்

2007ஆம் ஆண்டு போடப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்பட்டதால், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை நீர் குடிநீரில் கலக்கும் அவலம் நீடித்துவருகிறது. குறிப்பாக மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் சாக்கடை நீர் குடிநீரில் கலக்கும் சூழல் உருவாகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்தால், தற்காலிகமாக குழாய் அடைப்பைச் சரிசெய்வதோடு சரி நிரந்தர தீர்வு எதையும் வழங்குவதில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முதல்கட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்குப் பிறகு மாநகரகப்பகுதியில் பெரும்பாலான மக்கள் புதியதாக குடியேறியுள்ளதால் பெரும்பாலான பகுதிகளுக்கு முறையான பாதாளச்சாக்கடை வசதி இல்லை. மாநகரின் முக்கிய சாலைகளில் கூட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் விடப்படுகிறது.

இதனால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க திறந்தவெளி கால்வாயில் இருந்து கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்ய முறையான இயந்திரங்கள் இல்லாததால் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் போதிய பாதுகாப்பின்றி கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்துவருகின்றனர். இதனால், அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Tirunelveli Corporation Sewage canal problem
தூய்மைப் பணியாளர்

பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை பொறுத்தவரை 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு பணிகளைச் செய்துவந்தது. பின்னர், 2012 முதல் 2013ஆம் ஆண்டுவரை நெல்லை மாநகராட்சி பராமரிப்பு பணிகளைச் செய்துவந்தது. அதுவரை, பாதாளச்சாக்கடை முறையாகவே பராமரிக்கப்பட்டுவந்தது.

2013ஆம் ஆண்டு பாதாளச்சாக்கடை பராமரிப்பு பணிகள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. அப்போதிருந்து ஆண்டொன்றுக்கு 1.50 கோடி ரூபாய் தனியார் நிறுவனத்திற்கு நெல்லை மாநகராட்சி பராமரிப்பு பணிகளுக்குச் செலவிட்டுவருகிறது. இருப்பினும், அந்த தனியார் நிறுவனம் முறையாக பாதாளச் சாக்கடைகளை பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

குடிநீர் குழாயை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பாதாளச்சாக்கடை குழாய்

குடிநீர் திட்டப்பணிகள்

நெல்லை மாநகர் பகுதியில் தற்போது புதிய குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் 2,3ஆம் கட்ட பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளுக்காக மாநகரின் முக்கிய சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதேபோல், நெல்லை மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் பிரச்னையும் பெரும் பிரச்னையாக உள்ளது.

மாநகரில் வசிக்கும் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்கவேண்டும் என்பது அரசு விதி. ஆனால், நெல்லை மாநகராட்சியில் தற்போது நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 100 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. கூடுதலாக மக்கள் தண்ணீர் பெறும்வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 230 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்து 2016ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் கூடுதலாக 20 மில்லியன் லிட்டர் மாநகராட்சிக்கு கிடைக்கப்பெறும். இந்த திட்டத்திற்கான பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதோடு ஒப்பந்தம் வழங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த வித புதிய குடிநீர் திட்டப்பணிகளும் முடியவில்லை.

தோண்டும் பள்ளங்களையும் அவசரகதியில் தனியார் நிறுவனத்தினர் மூடிச்செல்வதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். தற்போது, பருவமழைக்காலம் என்பதால் மழை பெய்யும் நேரங்களில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக நெல்லை டவுன் சுத்தமல்லி, தச்சநல்லூர், பாலபாக்ய நகர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்

மக்களின் கருத்து என்ன?

இதுகுறித்து மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சையது அகமது பேசுகையில், எங்கள் பகுதியில் 2019ஆம் ஆண்டு முதல் குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது. பலமுறை இதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளோம். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றார். அதேபகுதியைச் சேர்ந்த முகைதீன் கூறுகையில், 2019ஆம் ஆண்டு முதல் எங்கள் பகுதியில் இச்சூழலே நிலவுகிறது. மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கும்போது பராமரிப்பு பணிக்காக குழி தோண்டிவிட்டு அப்படியேவிட்டுச் செல்கின்றனர்.

குழந்தைகள் குழியில் விழும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்கில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். தற்போது கூட பள்ளம் தோண்டி போட்டுள்ளனர், இதனால், மூன்று நாட்களாக எங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இங்கு பெரும்பாலும் ஏழை மக்கள்தான் வசிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி விடுவார்கள். ஆனால், எங்களைப் போன்றோர் என்ன செய்யமுடியும்? அரசு அலுவலர்கள் முயற்சி செய்து எங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்" என்றார்.

மாநகராட்சியின் பதில்!

மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் இப்பிரச்னைகள் குறித்து கேட்டபோது, "நெல்லை மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதலாக 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது போன்ற பணிகள் காரணமாக சில இடங்களில் சாக்கடை நீர் குடிநீரில் கலப்பது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் உரிய நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளோம். தூய்மை பணியாளர்களையும் தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். பருவமழை தொடங்கி உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவே, மக்கள் பாதிக்கப்படாத வகையில் களப்பணி ஆற்ற தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: பாதாள சாக்கடை திட்டப்பணியில் சுணக்கம்: வியாபாரிகள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.