ETV Bharat / state

‘கொலை மிரட்டல் விடுத்த திமுக பொறுப்பாளர்’ - நெல்லை திமுக பெண் கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு! - நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கம்

திருநெல்வேலியில் நடந்த வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தான் கூறும் நபர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் இல்லையெனில், 'பேட்டு தள்ளி விடுவேன்' என கூறிய திமுக பொறுப்பாளர் மீது திமுக பெண் கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Etv Bharat ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலர்கள்

author img

By

Published : Jul 27, 2023, 10:57 PM IST

திமுக பொறுப்பாளர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தர்ணாவில் ஈடுபட்ட திமுக பெண் கவுன்சிலர்கள்

திருநெல்வேலி மாநகராட்சியில் 'வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு' உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று (ஜூலை 27) மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களும் இதற்கான தேர்தலில் கலந்து கொண்டனர். இதில் 44 பேர் திமுக உறுப்பினர்கள், 7 பேர் திமுக கூட்டணி உறுப்பினர்கள். மேலும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 55 பேர் தேர்தலில் வாக்களித்தனர்.

வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவின் 9 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான 9 திமுக மாமன்ற உறுப்பினர்களை, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் அறிவித்திருந்தார். திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் ராஜாஜி அரங்கில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 10.30 மணிக்கு மேல் மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய நாள் நடைபெறும் தேர்தலில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் அறிவித்திருந்த 9 பேரில் 3 பேரை மாற்றி அறிவித்த நிலையில், அந்த மூன்று திமுக உறுப்பினர்களுக்கு போட்டியாக ஏற்கனவே மாமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்த 3 திமுக மாமன்ற உறுப்பினர்கள் போட்டியில் களமிறங்கியதால் மொத்தம் 12 பேர் இந்த உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால், 10:30 மணிக்கு முடிய வேண்டிய தேர்தல் மதியம் 12 மணிக்கு தான் முடிவுக்கு வந்தது.

அதன்படி இன்று நடந்து முடிந்த வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், அறிவித்த மூன்று பேர் பாலம்மாள், ஆமீனாபீவி, ராஜேஸ்வரி ஆகிய மூன்று திமுக உறுப்பினர்களும் தோல்வியுற்றனர். இதற்கு பதிலாக போட்டியிட்ட திமுக உறுப்பினர்கள் ரவீந்தர், பொன் மாணிக்கம், ஜெகநாதன் ஆகிய 3 திமுக உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.

திமுக பொறுப்பாளர் கொலைமிரட்டல்?: இதனைத்தொடர்ந்து மாமன்ற சாதாரணக் கூட்டம் தொடங்கியது. அப்போது முதலில் பேசிய திருநெல்வேலி மண்டல சேர்மன் மகேஸ்வரி, “இன்று நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டு தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மண்டல சேர்மன்களை அழைத்து வர சொல்லிப் பேசி இருந்தார். அப்போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அந்த இடத்தில் மேயர் மற்றும் துணை மேயர் இதற்கு ஒன்றும் பேசாமல் இருந்தனர். 55 உறுப்பினர்கள் முதலில் யாரை கொல்ல போகிறார்கள்” என ஆவேசமாக பேசினார்.

தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்கள்; மேயருக்கு எதிராக குரல்: மேலும், உடன் இருந்த மற்ற மண்டல சேர்மன்களையும் அழைத்துக் கொண்டு மாமன்ற கூட்டத்தில் மேயர் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது செயலுக்கு ஆதரவு தெரிவித்து மற்ற சில மாமன்ற உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதனால், சில நிமிடங்கள் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து சாதாரணக் கூட்டத்தை நிறுத்தப்பட்டதாக கூறி, மேயர் சரவணன் மாமன்ற கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார்.

இதனை அடுத்து மாமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என சில மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோதும், கூட்டம் தொடரவில்லை. இதனைத்தொடர்ந்து, கூட்டத்திலிருந்து வெளியே சென்ற இன்றைய தேர்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள், மேயருக்கு எதிராக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் செயல்பாட்டுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

மணீப்பூர் பெண்களுக்காக போராடிய எங்களுக்கு பாதுகாப்பு இல்லை: மேலும், மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு (Manipur Violence) தெரிவித்த முதலமைச்சர், எங்களது பிரச்னைகளையும் அறிவார். எனவே, எங்களுக்கும் சரியான ஒரு முடிவு ஏற்படுத்திக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்தனர் . கூட்டத்துக்கு பிறகு மண்டல தலைவர் மகேஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த தேர்தல் தொடர்பாக மேயர் எங்களை மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் இடம் அழைத்துச் சென்றார்.

அப்போது கவுன்சிலர்களும் இருந்தனர்; மாவட்ட செயலாளர், தான் சொல்லும் நபர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். நீங்கள் எப்படி குழுவிற்கு வர முடியும் என்று கேட்டதற்கு போட்டு தள்ளிவிடுவேன் என்று மிரட்டுகிறார். மணிப்பூர் பெண்களுக்கு நீதி கேட்டு நாங்கள் போராடினோம், ஆனால் எங்களுக்கே பாதுகாப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவுத்துறையில் விரைவில் '3.0 சர்வர்'- அமைச்சர் மூர்த்தி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.