நெல்லையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்படும் என்ற பயத்தில்தான் அதிமுக அரசு தேர்தலை தள்ளிப்போடுகிறது என்றும், அனைத்து தேர்தல்களிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியிருப்பது தற்காலிகமான முடிவுதான், அவர் விரைவில் நிரந்தரத் தலைவராக பொறுப்பேற்பார் எனவும் திருநாவுக்கரசர் கூறினார்.
மேலும், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.