கரோனாவின் தீவிரத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து வகை போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சுபதுக்க நிகழ்வுகளுக்கு கூட செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
முன்னறிவிப்பில்லாத லாக்டவுனால் பிழைப்புக்காக வெளிமாநிலத்துக்குச் சென்றவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அவ்வாறு குஜராத் மாநிலம் சூரத்தில் சிக்கிக்கொண்ட நெல்லையைச் சேர்ந்த சுப்புராஜ் (58) என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். அங்கு இட்லி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் உயிரிழந்த தகவலை அவருடன் பணியாற்றிய சக நண்பர்கள் அவரது மனைவி ரெங்கநாயகிக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஊரடங்கால் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் தவித்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக தன்னுடைய கணவரின் உடலை மீட்டு வரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளார். அப்பெண்ணின் நிலையைக் கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சூரத் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார்.
இறந்தவரின் உடலை தமிழ்நாட்டிற்கு அனுப்ப தான் உதவி செய்வதாக சூரத் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆம்புலன்ஸ் தயார் செய்யப்பட்டு ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கிமீ பயணம் செய்து சூரத்தை அடைந்த பின், அங்கிருந்து உடலை மீட்டு நெல்லைக்கு இன்று அவர்கள் வந்தடைந்தனர்.
மொத்தம் 4 நாள்களில் 4 ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்து பல்வேறு சிரமங்களைத் தாண்டி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் சுப்புராஜின் மனைவியிடம் அவரது உடல் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இந்தத் தகவலை நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
சூரத்தில் தொழில் செய்து வருபவர். உடல்நிலை குறைவு காரணமாக இறந்துவிட்டார். தனது கணவரது உடலை திருநெல்வேலி கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோள்.சூரத் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை பெற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இணங்க இன்று திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். pic.twitter.com/PFZtykkwud
— Sivaguru Prabakaran IAS (@SivaguruIAS) April 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சூரத்தில் தொழில் செய்து வருபவர். உடல்நிலை குறைவு காரணமாக இறந்துவிட்டார். தனது கணவரது உடலை திருநெல்வேலி கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோள்.சூரத் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை பெற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இணங்க இன்று திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். pic.twitter.com/PFZtykkwud
— Sivaguru Prabakaran IAS (@SivaguruIAS) April 16, 2020சூரத்தில் தொழில் செய்து வருபவர். உடல்நிலை குறைவு காரணமாக இறந்துவிட்டார். தனது கணவரது உடலை திருநெல்வேலி கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோள்.சூரத் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை பெற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இணங்க இன்று திருநெல்வேலி கொண்டு வரப்பட்டார். pic.twitter.com/PFZtykkwud
— Sivaguru Prabakaran IAS (@SivaguruIAS) April 16, 2020
வெளிநாட்டிலிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாது என மத்திய அரசே கைவிரித்த நிலையில், தன் மாவட்டத்தைச் சேர்ந்த நபரின் இறந்த உடலை மீட்டுக் கொண்டு வந்த மாவட்ட நிர்வாகத்தின் செயல் அளப்பரியது. கரோனா அச்சத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறையின் செயல்கள் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.