திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று (செப்.12) 17 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 996 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் மொத்தம் 800 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. முன்னதாக கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணி வரைக்கு மட்டுமே தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் அரசுப் பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது. இதுகுறித்து விசாரித்தபோது அந்த மாணவர் கங்கைகொண்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் ராம்குமார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராம்குமார் கூறுகையில், கலர் சட்டை அணிந்து வந்தால் தன்னை யாரோ என்று நினைத்து உள்ளே விட மாட்டார்கள் என்பதால் பள்ளி சீருடை அணிந்துள்ளேன் என்றார்.
இதையும் படிங்க : பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்