ETV Bharat / state

நெல்லையில் முதல் பிளாஸ்மா தெரபி சிகிச்சை வெற்றி! - பிளாஸ்மா தெரபி சிகிச்சை

நெல்லை:  நெல்லை அரசுத் தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பிளாஸ்மா தெரபி சிகிச்சையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துள்ளார்.

நெல்லையில் முதல் பிளாஸ்மா தெரபி சிகிச்சை வெற்றி!

author img

By

Published : Jul 30, 2020, 4:53 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதன்படி சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பிளாஸ்மா தெரபி சிகிச்சை: கரோனா நோயிலிருந்து பூரண குணமடைந்த நபரின் ரத்த அணுக்களில் வைரசை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கும். நோயிலிருந்து மீண்ட நபரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அதிலிருந்து இந்த ரத்த அணுக்கள் சேகரிக்கப்படும். சேகரிக்கப்பட்ட ரத்த அணுக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்துவதன் மூலம் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டுவந்த நபர் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்வதற்கு, தனது ரத்த மாதிரிகளை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில், மாவட்டத்தில் முதல்முறையாக இன்று (ஜூலை 29) மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா தெரபி சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு தீவிர கரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து பிளாஸ்மா சிகிச்சை மூலம் அந்த நபரை தற்போது மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் முதல் பிளாஸ்மா சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதால், அரசு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.