ETV Bharat / state

சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்!

திருநெல்வேலியில் புனித வெள்ளியை முன்னிட்டு சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் இனிதே துவக்கப்பட்டது.

Good Friday
புனித வெள்ளி
author img

By

Published : Feb 22, 2023, 10:43 AM IST

Good Friday: சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்

திருநெல்வேலி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித நாட்களை நினைவு கூரும் வகையில், உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால நோன்பு மேற்கொண்டு சிறப்பு வழிபாடுகளை நடத்துவார்கள். அதன் ஆரம்பமாக சாம்பல் புதனுடன் இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.

இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி கலந்து கொண்டு பங்கு இறை மக்களின் நெற்றியில் சாம்பலை பூசி தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இந்த தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான வருகிற ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துக்க தினமான புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ஆகையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சாம்பல் புதன் வழிபாடு அனுசரிக்கப்பட்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: முல்லைப்பெரியாறு அணையின் உரிமையை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டேன்: ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.