ETV Bharat / state

நெய் சோறு, மட்டன் குழம்புடன் அசத்தல் விருந்து.. தூய்மை பணியாளர்களை கவுரவித்த பஞ்சாயத்து தலைவர்!

author img

By

Published : Feb 18, 2023, 10:37 AM IST

திருநெல்வேலியில் நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசத்துடன் தூய்மை பணியாளார்களுக்கு தடல்புடல் விருந்து அளித்த தாழையூத்து பஞ்சாயத்து தலைவரின் செயல் நெல்லை மக்களை நெகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது.

panchayat president
துப்புரவு பணியாளர்கள் நெகிழ்ச்சி!

திருநெல்வேலியில் நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசம் என தடால் புடாலாக விருந்து அளித்த பஞ்சாயத்து தலைவர்

திருநெல்வேலி: நாட்டின் சுகாதாரத்தில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. கை நிறையச் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் மேலும் அதிக சம்பளம் கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது உண்டு. அந்தப் போராட்டத்தால் பொது மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது. அதே சமயம் மிக மிகக் குறைந்த ஊதியம் வாங்கும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் சுகாதாரமும் கேள்விக் குறியாகிவிடும்.

இதுபோன்ற உன்னதமான பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்குச் சமுதாயத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. குறிப்பாகப் பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், சமுதாயத்தில் மரியாதை வேண்டும் என்பதே அவர்களின் நியாயமான கோரிக்கையாகும். ஆனால் பெரும்பாலான இடங்களில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உட்பட யாரும் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனது பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குச் சிறப்பு விருந்து அளித்து அவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பீர் முகைதீன். இந்த தாழையூத்து ஊராட்சியில் மொத்தம் 13 கிராமங்களில் சுமார் 18000 மக்கள் வசித்து வருகின்றனர். அதே சமயம் இந்த பஞ்சாயத்தில் வெறும் 9 துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

நாள்தோறும் குப்பை நாற்றத்திற்குள் பொழுதைக் கழிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்க ஊராட்சித் தலைவர் பீர் முகைதீன் முடிவெடுத்தார். அதன்படி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து தூய்மை பணியாளர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்து என்றால் ஏதோ சாப்பாடு சாம்பார் அவியல் தான் இருக்கும் என நினைத்துச் சென்ற தூய்மை பணியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது பஞ்சாயத்துத் தலைவர் பீர் முகைதீன் தூய்மை பணியாளர்களை இருக்கைகளில் அமர வைத்து இலை விரித்துத் தானே பரிமாறத் தொடங்கினார். அதில் நெய் சோறு, மட்டன் குழம்பு, பாயாசம் என தடல் புடலாகச் சாப்பாடு வழங்கியதைக் கண்டு தூய்மை பணியாளர்கள் வியப்படைந்தனர். பின்னர் அனைவரும் வயிறார சாப்பிட்டனர்.

இது குறித்து பஞ்சாயத்துத் தலைவர் பீர் முகைதீனிடம் கேட்டபோது, "தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் படி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியிருந்தார். நான் அவரது அறிவுறுத்தலை ஏற்றுத் தூய்மை பணியாளர்களை கவுரவித்தேன். தூய்மை பணியாளர்கள் மிக குறைந்த ஊதியத்தில் பணி நிரந்தரம் இல்லாமல் வேலை செய்கின்றனர். எனவே அவர்களின் மன மகிழ்ச்சிக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்திருந்தேன். உணவைச் சாப்பிட்ட தூய்மை பணியாளர்கள் "எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு சாப்பாட்டைச் சாப்பிட்டதில்லை என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்" என்று உணர்ச்சி பொங்க கூறினர்.

இதையும் படிங்க: பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு மேலும் 2 அடி அதிகரிப்பு.. பணிகளை துவக்கிய பொதுப்பணித்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.