ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. அதற்காக தமிழ்நாடு காவல்துறைக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட தென்காசி புதிய எஸ்.பி. சுகுணா சிங் பேசுகையில், ''ஏற்கனவே காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவலன் எஸ்.ஓ.எஸ் என்ற செயலியை பெண்கள் முதியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் தங்கள் செல்போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆபத்து காலங்களில் இந்த செயலி மூலம் தகவல் கொடுத்தால் உடனடியாக காவல்துறையினர் வருவார்கள் எனவும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்'' என்றார். இந்த சந்திப்பின்போது காவல் துணைக்கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கிராமங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை!