ETV Bharat / state

விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் - 10 கிராம மீனவர்கள் வேலைநிறுத்தம்! - நாட்டு படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாட்டு படகு மீனவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் நடத்தும் தாக்குதலை கண்டித்து நெல்லையில் 10 கிராம மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்
மீனவர்கள் வேலைநிறுத்தம்
author img

By

Published : Mar 3, 2023, 8:51 AM IST

விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் - 10 கிராம மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

நெல்லை: தமிழ்நாட்டில் பாரம்பரிய முறையில் நாட்டுப் படகு மூலம் நெல்லை மாவட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி தங்கு தளமோ, மீன்பிடித் துறைமுகமோ இல்லாத காரணத்தினால் சுற்றுவட்டரத்தை சேர்ந்த 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடற்கரை ஒட்டி இரண்டு கடல் மைல் தொலைவு வரை வந்து மீன்பிடித்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டுப் படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்களும், படகுகள் சேதம் அடைந்து வருகின்றன.

இதனால் கடலுக்குள் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவதும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு பதிவு செய்து வருவதும் அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. இடிந்தரை கடற்பகுதியில் இருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது குமரி மாவட்ட மீனவர்களின் விசைப்படகு நாட்டுப் படகு மீது மோதியதில் படகில் இருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர்.

அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மற்ற நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் .இதில் வினோத் மற்றும் அண்டன் ஆகிய இரு மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து இடிந்தகரையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் சுமார் 3,000 மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின் இடிந்தவரை ஊர்மக்கள் கூடி, நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தொடர்ந்து இதுபோன்று கடற்கரை ஓரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும், இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு இது பற்றி சுமுகமாக பேசி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி, நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் நெல்லையின் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீனவர்கள் கலந்து கொண்டனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ உண்மையில்லை" - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.