திருநெல்வேலி: அரசு மருத்துவக் கல்லூரி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக லேப் டெக்னீசியன், லிஃப்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட இதர மருத்துவ பிரிவுகளில் சுமார் 90-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ரூ.8,400 மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான சம்பளமாக இருந்தாலும் முறையாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. மூன்று மாத சம்பளம் நிலுவையில் உள்ளதாக ஒப்பந்த பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
நிலுவையிலுள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கையில் தட்டு ஏந்தி மருத்துவமனையின் முன்பாக ஒப்பந்த பணியாளர்கள் இன்று (டிச. 19) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்த பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இமாச்சல் பிரதேச முதலமைச்சருக்கு கரோனா தொற்று உறுதி